பட்டப்படிப்பு முடித்தவருக்கு தமிழக அரசில் 645 பணியிடங்கள்
தமிழக அரசில் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது. 'குரூப் 2' பிரிவில் துணை பதிவாளர், வேலைவாய்ப்பு அதிகாரி, ஸ்பெஷல் பிராஞ்ச் அசிஸ்டென்ட், பாரஸ்டர் உட்பட 50, 'குரூப் 2ஏ' பிரிவில் சீனியர் இன்ஸ்பெக்டர், ஆடிட் இன்ஸ்பெக்டர், வருவாய் ஆய்வாளர், அசிஸ்டென்ட், எக்சி கியூட்டிவ் ஆபிசர் உட்பட 595 என மொத்தம் 645 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது: பிரிவு வாரியாக மாறுபடும் தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் தேர்வுக்கட்டணம்: ரூ. 100. பதிவுக்கட்டணம்: ரூ.150 கடைசிநாள்: 13.8.2025 விவரங்களுக்கு: tnpsc.gov.in