உள்ளூர் செய்திகள்

கப்பல் கட்டுமான நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

மும்பையில் உள்ள மசகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் (எம்.டி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எலக்ட்ரீசியன், பிட்டர், வெல்டர்,கார்பென்டர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் உள்ளிட்ட பணிகளில் குரூப் 'ஏ' பிரிவில் 214, குரூப் 'பி' பிரிவில் 275, குரூப் 'சி' பிரிவில் 34 என மொத்தம் 523 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., வயது: 14-18 / 15-19 / 16-21(1.10.2025ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 30.6.2025விவரங்களுக்கு: mazagondock.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !