கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை
சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவியாளர் பிரிவில் மொத்தம் 50 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / பி.இ., / பி.எல்., + கூட்டுறவு பயிற்சி படிப்பு. வயது: பொது 18 - 32, மற்ற பிரிவினர் 18 - 60. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு தேர்வு மையம்: சென்னை விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 கடைசி நாள்: 31.12.2025 விபரங்களுக்கு: tncoopsrb.in