சட்ட பல்கலையில் உதவியாளர் பணி
தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலையில் தற்காலிக காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் அசிஸ்டென்ட் 5, ஜூனியர் அசிஸ்டென்ட் (அக்கவுன்ட்ஸ்) 1 என மொத்தம் 6 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி / பி.காம்., கூடுதல் தகுதி: ஆங்கிலம் / தமிழில் தட்டச்சு சான்றிதழ், tally ERP 9.0 சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம்: குறைந்தது மூன்றாண்டு. வயது: 18-40 (18.6.2025ன் படி)தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.ஊதியம்: மாதம் ரூ. 19,500பணிக்காலம்: ஓராண்டு. பணி நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். The Registrar, Tamilnadu national law university, Navalurkuttappattu, Dindigul Main Road, Trichirappalli - 620 027.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500கடைசிநாள்: 18.6.2025 மாலை 5:00 மணிவிவரங்களுக்கு: tnnlu.ac.in