எட்டாம் வகுப்பு முடித்தவருக்கு உதவியாளர் பணி
தமிழ்நாடு விற்பனைவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலுவலக உதவியாளர் 18, டிரைவர் 2, இரவுக்காவலர் 2, துப்புரவுப்பணியாளர் 2, இரவுக்காவலர் + துப்பரவு பணியாளர் 1 என மொத்தம் 25 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு/ தமிழில் எழுத படிக்க தெரிந்திருத்தல்வயது: 18 - 32 (1.7.2024ன் படி)தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வுபணியிடம்: சென்னை, கோவை, மதுரை.விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தலைவர், தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், 2ம் தளம், மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டடம், உயர்நீதிமன்ற வளாகம், சென்னை - 600 104.கடைசிநாள்: 11.11.2024விவரங்களுக்கு: ctd.tn.gov.in