தமிழக அரசில் உதவியாளர் காலியிடங்கள்
தமிழக அரசின் அரசுப் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) இந்த அமைப்பே நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக அரசுப் பணியிடங்களில் காலியாக இருக்கும் 54 உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடங்கள்: டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள இந்த இடங்கள் தமிழக அரசின் செக்ரட்டேரியட்டில் சட்டம் மற்றும் நிதி தவிர்த்த இதர துறைகளில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வயது: 01.07.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அவர்கள் சார்ந்திருக்கும் பிரிவைப் பொறுத்து 30 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மூன்று வருட பணியனுபவம் கூடுதலாகத் தேவைப்படும். முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பக் கட்டணம்: ஒரு முறை பதிவுக் கட்டணம் மற்றும் ரூ.100/-ஐ செலுத்த வேண்டும். இதனை எஸ்.பி.ஐ., அல்லது இந்தியன் வங்கி வாயிலாக செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.கடைசி நாள்: 2017 செப்., 26.இணையதள முகவரி: www.tnpsc.gov.in/latest-notification.html