சி.ஆர்.பி.எப்., படையில் 240 காலியிடங்கள்
சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் எனப்படும் சி.ஆர்.பி.எப்., | என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாதுகாப்பு படை. இது தேர்தல் காலங்களிலும், நெருக்கடி காலங்களிலும் சட்டம் மற்றும் ஒழுங்கைக் காப்பதில் இந்தப் படையின் பணி இன்றி அமையாததாகும். இந்தப் படையில் காலியாக உள்ள 240 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : சப்-இன்ஸ்பெக்டர் ஓவர்சியர் சிவில் பிரிவில் 135ம், அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் டிராப்ட்ஸ்மேன் பிரிவில் 3ம், சி.டி., மேசன் பிரிவில் 65ம், சி.டி., பிளம்பர் பிரிவில் 11ம், சி.டி., எலக்ட்ரீசியனில் 14ம், சி.டி., கார்பெண்டர் மற்றும் பெயிண்டரில் தலா 6ம் சேர்த்து மொத்தம் 240 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது: இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஓவர்சியருக்கு 30ம், டிராப்ட்ஸ்மேனுக்கு 25ம், இதர பதவிகளுக்கு 23ம் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய். இதனை எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வாயிலாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.கடைசி நாள் : 2017 மே 5. விபரங்களுக்கு: