உள்ளூர் செய்திகள்

சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு

கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் (சி.எஸ்.ஐ.ஆர்.) நிறுவனத்தின் அங்கமான ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் குரூப்பின் சார்பாக விரிவுரையாளர் பதவிகளுக்கான நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வு - நெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு உத்தேசமாக எதிர்வரும் 2017 டிச., 17ல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வயது: 2017 ஜூலை 1 அடிப்படையில் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: எம்.எஸ்.சி., / பி.இ., / பி.டெக்., / எம்.பி.பி.எஸ்., போன்ற படிப்பில் தேர்ச்சி தேவைப்படும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.தேர்ச்சி முறை: மூன்று பிரிவுகளிலான தேர்வை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பகுதி ஏ பிரிவு அனைவருக்கும் பொதுவானது. பகுதி பி பிரிவு விண்ணப்பிக்கும் பிரிவிலானது. பகுதி சி பிரிவு அறிவியல் தொடர்புடைய அதிகத் திறன் தேவைப்படும் கேள்விகள் கேட்கப்படும்.எழுத்துத் தேர்வு மையங்கள்: தமிழகத்தில் இத்தேர்வு சென்னையில் நடத்தப்படுகிறது. விண்ணப்பக் கட்டணம்: நெட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் 1000 ரூபாய். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாள்: 2017 செப்., 16விபரங்களுக்கு: http://csirhrdg.res.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !