உள்ளூர் செய்திகள்

பைலட் ஆக ஆசையா

விமான சேவைகளில் மிகவும் பிரசித்தி பெற்றதுதான் ஏர் இந்தியா நிறுவனம். விமான சேவைகளில் தனியார் விமானங்கள் வருவதற்கு முன்னால் நமது நாட்டின் விமான சேவைகளை ஏர் இந்தியாவும், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனமுமே பெரும்பாலும் செய்து வந்தன. தற்போதும் போயிங் 787 போன்ற சேவைகளைத் தருவதில் ஏர் இந்தியாவின் பங்கு அளப்பரியது. பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் சீனியர் டிரெய்னி பைலட் / டிரெய்னி பைலட் பிரிவில் காலியாக இருக்கும் 217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது: இந்த இரண்டு இடங்களுக்குமே 40 வயதுக்கு உட்பட்டவர்களே விண்ணப்பிக்க முடியும்.கல்வித் தகுதி: பிளஸ் 2 அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும்.தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறனறியும் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்துடன் உரிய இணைப்புகள் மற்றும் ரூ.3000/-க்கான டி.டி.,யுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.General Manager (Personnel),Air India Limited, Headquarters Airlines House, 113, Gurudwara Rakab Ganj Road, New Delhi-110001 கடைசி நாள்: 2017 செப்.,25.விபரங்களுக்கு: www.airindia.in/careers.htm


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !