உள்ளூர் செய்திகள்

தமிழக அரசின் மருத்துவ சேவைகளுக்கான தேர்வு அறிவிப்பு

தமிழக அரசின் மருத்துவ மனைகளில் துணை மருத்துவ அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 106 இடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான மருத்துவ சேவைகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள்: அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபிசர் பிரிவில் ஓமியோபதி பிரிவில் 4ம், ஆயுர்வேதா பிரிவில் 1ம், சித்தா பிரிவில் 101ம் சேர்த்து மொத்தம் 106 இடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.வயது: தமிழக அரசின் உதவி மருத்துவ அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 57 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: * ஓமியோபதி மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் முது நிலை டிப்ளமோ படிப்பை எப்.எப்., ஹானர்ஸ் (லண்டன்), எம்.எப்., ஹானர்ஸ் (லண்டன்), டி.எப்., ஹானர்ஸ் (லண்டன்), கோல்கட்டா ஓமியோபதிக் கல்லுாரி வழங்கும் படிப்பு, பட்டப் படிப்பு போன்ற வரையறுக்கப்பட்ட படிப்பு ஏதாவது ஒன்றை முடித்திருக்க வேண்டும். * ஆயுர்வேதா மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆயுர்வேதாவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். * சித்தா பிரிவு மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எச்.பி.ஐ.எம்., ஜி.சி.ஐ.எம்., பி.ஐ.எம்., எல்.ஐ.எம்., பி.எஸ்.எம்.எஸ்., போன்ற படிப்பை முடித்திருக்க வேண்டும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.தேர்வு மையம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 750 ரூபாய். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.375/- கடைசி நாள்: 2017 ஆக., 22.விபரங்களுக்கு: www.mrb.tn.gov.in/notifications.html


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !