உர நிறுவனத்தில் சேர விருப்பமா
ஹிந்துஸ்தான் உர, ரசாயன நிறுவனத்தில் (ஹெச்.யு.ஆர்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டென்ட் 47, சீனியர் இன்ஜினியர் 35, அசிஸ்டென்ட் மேனேஜர் 21, மேனேஜர் 3 உட்பட மொத்தம் 108 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ / எம்.பி.ஏ., வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: இல்லைகடைசிநாள்: 6.5.2025விவரங்களுக்கு: www.hurl.net.in