உள்ளூர் செய்திகள்

ரயில் பெட்டி தொழிற்சாலையில் சேர விருப்பமா...

சென்னையில் உள்ள ஐ.சி.எப்., எனும் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கார்பென்டர், எலக்ட்ரீசியன், பிட்டர், மெஷினிஸ்ட், பெயின்டர், வெல்டர், ரேடியாலஜி, பெதாலஜி பிரிவுகளில் மொத்தம் 1010 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2/ஐ.டி.ஐ., வயது: 15 - 24 தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 11.8.2025 விவரங்களுக்கு: pb.icf.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !