உள்ளூர் செய்திகள்

யு.பி.எஸ்.சி.,யின் ராணுவப் படைகளுக்கான அறிவிப்பு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யூ.பி.எஸ்.சி., அமைப்பு மத்திய அரசின் கேந்திரமான பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக நேஷனல் டிபன்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகாடமியில் காலியாக உள்ள 390 இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடங்கள்: நேஷனல் டிபன்ஸ் அகாடமி சார்பாக ராணுவத்தில் 208 இடங்களும், கப்பல் படையில் 55 இடங்களும், விமானப் படையில் 72 இடங்களும் சேர்த்து 335 இடங்களும், நேவல் அகாடமியில் 55 இடங்களும் இந்த தேர்வுகளின் மூலம் நிரப்பப்பட உள்ளன.வயது: 02.07.1998க்கு பின்னரும், 01.07.2001க்கு முன்னரும் பிறந்தவர்கள் இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.கல்வித் தகுதி: பிளஸ் 2 விற்கு நிகரான படிப்பை விண்ணப்பதாரர்கள் முடித்திருக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-ஐ இந்த தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கியின் கேஷ் கவுன்டரிலோ, அல்லது இதே வங்கியின் நெட் பேங்கிங், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாயிலாகவோ ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.விண்ணப்பிக்க: மேற்கண்ட தகுதி உடைய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.கடைசி நாள் : 10.02.2017இணையதள முகவரி: www.upsconline.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !