உள்ளூர் செய்திகள்

எல்லைக்காவல் படையில் டெக்னிகல் பணி

இமயமலைத் தொடரை ஒட்டிய இந்தியாவின் எல்லையில் பிரத்யேக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே பணிபுரிய முடியும். இந்தத் தேவைகளை மனதில் கொண்டு இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் படை நிறுவப்பட்டது. இயற்கை சீற்றம் மற்றும் பேரிடர் காலங்களில் பணிபுரிவதற்கேற்ற திறமைகளைக் கொண்ட படையாக விளங்கும் ஐ.டி.பி.பி., தற்போது நம் நாட்டின் காவல் படைகளில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக உள்ளது. பெருமைக்குரிய இப்படையில் கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்) பிரிவில் காலியாக இருக்கும் 303 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : டெய்லரில் 19, கார்டனரில் 38, காப்ளரில் 27, வாட்டர் கேரியரில் 95, சபாய் கரம்சாரியில் 33, குக் பிரிவில் 55, வாஷர்மேனில் 25, பார்பரில் 11ம் காலியிடங்கள் உள்ளன.தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக இந்த இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க : விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.கடைசி நாள் : 2017 செப்., ௭.விபரங்களுக்கு : <http://itbpolice.nic.in/itbpwebsite/index.html>


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !