உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது இரும்பு நிறுவனம்

மத்திய அரசின் என்.எம். டி. சி., இரும்பு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எக்சிகியூட்டிவ் டிரைனி பிரிவில் மெக்கானிக்கல் 51, எலக்ட்ரிக்கல் 22, நிதி 7, கெமிக்கல் 4, சிவில் 3, கம்ப்யூட்டர் 3, எச்.ஆர்., 3 உட்பட மொத்தம் 102 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., / எம்.சி.ஏ., / சி.ஏ., வயது: 18-27 (11.8.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 11.8.2026 விவரங்களுக்கு: nmdcetr.formflix.org


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !