மத்திய அரசில் பயிற்சி அதிகாரி பணியிடங்கள்
மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. பயிற்சி அதிகாரி 32 (பிட்டர் 21, மெக்கானிக் 4, தையல் 4, கம்ப்யூட்டர் ஹார்டுவேர் 4, பிளம்பர் 3), தொல்லியல் இன்ஜினியர் 15, மருத்துவ அதிகாரி 13, மைனிங் இன்ஜினியர் 3 உட்பட மொத்தம் 84 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.இ., / எம்.டெக்., / எம்.எஸ்சி., வயது: 18 - 30, 18 - 35 (29.5.2025ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 29.5.2025விவரங்களுக்கு: upsconline.gov.in