உள்ளூர் செய்திகள்

கடலோரக் காவல் படையில் பணிபுரிய விருப்பமா

நமது நாட்டின் கடலோர எல்லைகளைக் காப்பது, இயற்கை சீற்றம் போன்ற ஆபத்துக் காலங்களில் நடவடிக்கைகளை எடுப்பது, கடலுடன் நில்லாமல் சமவெளிப் பகுதிகளுக்கான தரைவழி மற்றும் வான்வெளி பாதுகாப்புக் கட்டுமானங்களை உருவாக்குவது போன்ற முக்கிய நடவடிக்கைகளிலும் இந்தப் படை இயங்கி வருகிறது. பெருமைக்குரிய இந்தப் படையில் நாவிக் (ஜெனரல் டியூடி) பிரிவிலான காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: விண்ணப்பதாரர்கள் 18 - 22 வயதுக்குள் இருக்க வேண்டும். 01.08.1995 முதல் 31.07.1999க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்வித் தகுதி: பிளஸ் 2 படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.ஊதியம் எவ்வளவு: கடலோரக் காவல் படையின் நாவிக் (ஜெனரல் டியூடி) பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மாதம் ரூ.21 ஆயிரத்து 700 ஊதியமாகப் பெறமுடியும்.மண்டலம் என்ன: தமிழகத்திலிருந்து இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் கிழக்கு மண்டலத்தில் மண்டபம் பகுதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். சென்னையிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் சென்னைக்கு விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, மருத்துவ தகுதித் தேர்வு, குறைந்தபட்ச உடல் தகுதித் தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாள்: 2017 செப்., 4. விபரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_18_1718b.pdf


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !