உள்ளூர் செய்திகள்

ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,வில் பணி

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,) தெலுங்கானாவின் ஐதரபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் காப்பீட்டு தொழிலை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதலே இதன் முக்கிய பணி. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 30 துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்குரிய வயது சலுகையும் உள்ளது. கல்வித்தகுதி: நான்கு விதமான பிரிவுகள் உள்ளதால், விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித்தகுதி உள்ளது. தேர்ச்சி முறை: முதல்நிலை எழுத்துத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். தமிழகத்தில் சென்னையில் எழுத்துத்தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 650 ரூபாய். எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு 100 ரூபாய். கடைசிநாள்: 2017 செப்., 5விபரங்களுக்கு: https://www.irdai.gov.in/ADMINCMS/cms/Uploadedfiles/14-08-2017_IRDAI%20AMs%20Rectt%20%20Notification.pdf


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !