உள்ளூர் செய்திகள்

பண்ணை குட்டையில் நாட்டு வஞ்சிரம் மீன் வளர்ப்பு

நாட்டு வஞ்சிரம் மீன் வளர்ப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.கோபிகா ரமணன் கூறியதாவது:நான்கு விதமான மீன் குட்டைகளை அமைத்துள்ளேன். இதில், 40 சென்ட் நிலத்தில், பண்ணை குட்டை அமைத்து, நாட்டு ரக மீன்களை வளர்த்து வருகிறேன்.இந்த ரக மீன்கள், எட்டு மாதங்களில் பிடித்து விற்பனை செய்து விடலாம். அதற்கு ஏற்ப மீன்களுக்கு தீவனங்களை வழங்க வேண்டும். அப்போது தான், மீன்களின் எடை கூடும். குறிப்பாக, மிதவை தீவனங்களை போடும் போது, மீன்கள் விரும்பி உண்ணும். அந்த மீன்களின் வளர்ச்சி மற்றும் எடையும் கூடும். அதேபோல, நாட்டு வஞ்சிரம் மீன் குட்டையில், பிற ரக நாட்டு மீன்களை வளர்க்கக் கூடாது.இது, பிற ரக மீன்களுக்கு போடும் தீவனத்தை, நாட்டு வஞ்சிரம் மீன்களே சாப்பிட்டு விடும். பிற ரக மீன்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, மீன் வளர்ப்பில் நாட்டு வஞ்சிரம் மீனில் நல்ல வருவாய் கிடைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி. கோபிகா ரமணன்,63803 13778.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !