உள்ளூர் செய்திகள்

தென்னை தோட்டங்களில் கடிகார கொடி பூ சாகுபடி

கடிகார கொடி பூ சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் எம்.ராஜிவ்காந்தி கூறியதாவது:மலை மண் தோட்டத்தில், மா, பலா, கொய்யா உள்ளிட்ட பலவித பழ மரங்களை நட்டுள்ளேன். இதுதவிர, வேங்கை, தேக்கு, மகோகனி, ஈட்டி உள்ளிட்ட மரப்பொருட்கள் செய்யும் மர வகைகளை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், இந்திய கடிகார கொடி பூ சாகுபடி செய்துள்ளேன்.இது, ஏற்காடு, ஏலகிரி உள்ளிட்ட குளிர் பிரதேசங்களில் விளையக்கூடிய பூ வகையாகும். இந்த கொடி பூவை பார்க்கும் போது, சரக்கொன்றை பூ போல கொத்து கொத்தாக இருக்கும். இயற்கை பந்தல் அமைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மஞ்சள், இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பூ, அதிக தேன் உற்பத்திக்கு உதவுகிறது.குறிப்பாக, மா, தென்னை உள்ளிட்ட தோட்டங்களில் சாகுபடி செய்தால், கூடுதல் மகசூல் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: எம்.ராஜிவ்காந்தி,89402 22567.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !