உள்ளூர் செய்திகள்

மண் வளத்தை மேம்படுத்த தக்கை பூண்டு சாகுபடி

தக்கை பூண்டு சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது: பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். பாரம்பரிய நெல் ரகங்களுக்கு, ரசாயன உரங்களை பயன்படுத்துவதில்லை. இதற்காக ஒரு பருவத்திற்கு நெற்பயிர் சாகுபடி செய்யாமல், தக்கை பூண்டு விதையை விதைத்து விடுவேன். ஒரு ஏக்கருக்கு, 10 கிலோ விதைகள் போதும். இந்த செடிகளின் வேர் முடிச்சுகளில், 80 சதவீதமும், இலைகளில், 30 சதவீதமும் தழைச்சத்து உள்ளது. குறிப்பாக, தக்கை பூண்டில் அதிக வேர்முடிச்சு விடும்போது, கண்ணுக்கு தெரியாக நுண்ணுயிர்கள் வேர் முடிச்சில் தங்கி, தக்கை பூண்டு விதைத்திருக்கும் நிலத்தின் மண் வளத்தை மேம்படுத்தும். இறுகி இருக்கும் மண்ணை, செடிகள் வேர் ஊன்றி செல்லும் அளவிற்கு, மண்ணை இலகுவாக்கும். இதனால், அடுத்து சாகுபடி செய்யும் பயிருக்கு அதிக ஊட்டச்சத்து கிடைத்து, கூடுதல் மகசூலுக்கு வழி வகுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன், 96551 56968.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !