மாடி தோட்டத்திலும் நாட்டு தக்காளி சாகுபடி
மாடி தோட்டத்தில், நாட்டு ரக தக்காளி சாகுபடி குறித்து, விவசாயி கே.கவிதா கூறியதாவது:மாடி தோட்டத்தில், கத்திரி, தக்காளி ஆகிய நாட்டு ரக காய்கறிகள் சாகுபடி செய்து வருகிறேன். இதுதவிர, கேசவர்த்தினி உள்ளிட்ட மூலிகைகளை சாகுபடி செய்து, மதிப்புகூட்டிய எண்ணெயாக தயாரித்து விற்பனை செய்து, கணிசமான வருவாய் ஈட்டிவருகிறேன்.அந்த வரிசையில், மாடி தோட்டத்தில் நாட்டு ரக தக்காளி சாகுபடி செய்து வருகிறேன்.இந்த தக்காளி சிறியதாகஇருந்தாலும், அதிக புளிப்பு சுவையுடன்இருக்கும்.வயலில் விளையும்தக்காளிகளை அதிக எண்ணிக்கையில் சமையலுக்கு பயன்படுத்தும் போது, மாடி தோட்டத்தில் விளையும் நாட்டுரக தக்காளிகளை குறைந்த எண்ணிக்கையில் பயன்படுத்தலாம். எங்கள் வீட்டு தேவைக்குபோக விற்பனை செய்துவிடுகிறேன்.இவ்வாறு அவர்கூறினார்.தொடர்புக்கு: கே.கவிதா, 88708 00021