மாடி தோட்டத்திலும் புனே ரக அத்தி சாகுபடி
புனே ரக அத்தி சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும் பழ மரங்களை சாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், புனே ரக அத்தி, மாடித் தோட்டத்தில் சாகுபடி செய்துள்ளேன். இது, குறுகிய காலத்தில் மகசூல் கொடுக்கும் பழ வகையாகும்.புனே ரக அத்திப்பழத்திற்கு, அதிக தண்ணீர் தேவைப்படாது. லேசான ஈரப்பதம் இருந்தால் போதும், நல்ல மகசூல் ஈட்டலாம்.இந்த ரக அத்தி பழத்தில், அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்திருப்பதால், கூடுதல் விலை கொடுத்து வாங்கவும், மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:பி.கிருஷ்ணன்,94441 20032.