உள்ளூர் செய்திகள்

நிலத்தை பண்படுத்தினால் வேர் அழுகல் நோய் தாக்கலாம்

காய்கறி சாகுபடிக்கு முன், நிலத்தை பக்குவப்படுத்துவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வி.எம்.மணி கூறியதாவது:கார்த்திகை மாதத்தில், கத்திரி, மிளகாய், வெண்டை ஆகிய காய்கறி பயிர்களை சாகுபடி செய்வதற்கு உகந்த மாதமாகும்.காய்கறி பயிரிடும் முன், நிலத்தை பண்படுத்தி வைக்க வேண்டும். குறிப்பாக, தென் மேற்கு பருவ மழை முடிந்த பின், நிலத்தை பண்படுத்த துவக்கலாம்.இதுபோல் நான்கு முறை பண்படுத்திய பின், காய்கறி செடிகளை நட்டால், வேர் செல் மற்றும் வேர் அழுகல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். மேலும், நடும் செடிகள் இறக்காமல், கூடுதல் மகசூல் அளிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 80986 55477


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !