உள்ளூர் செய்திகள்

புற்களை களை எடுக்கும் விரல் வடிவ கருவி

விரல் வடிவத்தில் களை எடுக்கும் கருவி தயாரிப்பு குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல் பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். நெல் நடவு செய்யும் போது, வரிசை நடவு மற்றும் இயந்திர நடவு செய்து வருகிறேன்.நெற்பயிர் அல்லாத இடத்தில், புற்கள் வளர்ச்சி தான் அதிகமாக காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த முடியவில்லை என, பல விவசாயிகள் புலம்புகின்றனர். முக்கோண களை எடுக்கும் கருவியை பயன்படுத்தி, புற்களை கட்டுப்படுத்தி விடலாம் என, தொழில்நுட்ப வல்லுனர்கள் வினியோகம் செய்து வருகின்றனர்.இதை பயன்படுத்தும் போது தான், பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க, விரல் வடிவ களை எடுக்கும் கருவி தயாரித்துள்ளேன்.இதை, இயந்திர நடவு மற்றும் கயிறு பிடித்து நடும் வரிசை நடவு நெல் வயலில் பயன்படுத்தும் போது, எளிதாக கையாள முடிகிறது.குறிப்பாக, மனிதன் விரலில் பிடித்து களை எடுப்பது போல, வடிவமைத்து இருக்கிறேன்.இதை, வயலில் புற்கள் எடுத்து முடித்த பின், பிரித்து தனியாக எடுத்து செல்லும் வகையிலும் வடிவமைத்து உள்ளேன். இதேபோல், பிற விவசாயிகளும் தயாரித்து பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன்,96551 56968.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !