குறைந்த மகசூலில் அதிக வருவாய் ஈட்டும் மூலிகை செடிகள்
மாடி மற்றும் விளை நிலங்களில், மூலிகை செடிகள் சாகுபடி செய்வது குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச்சேர்ந்த முன்னோடி விவசாயி ஜெ. திருவேங்கடம் கூறியதாவது:எங்களுக்கு சொந்தமான விளை நிலங்களில், பிரண்டை, பூனை மீசை, சித்தரத்தை, வசம்பூ உள்ளிட்ட பலவித மூலிகை செடிகள் சாகுபடி செய்துள்ளேன்.பொதுவாக, நெல், காய்கறி உள்ளிட்ட விளைபொருட்களில் குறைந்த மகசூல் மற்றும் சொற்பமான வருவாய் மட்டுமே கிடைக்கிறது. மூலிகை மருத்துவ சாகுபடிசெய்வதில் மட்டும் அதிகமான மகசூல் கிடைக்கிறது. உதாரணமாக, பூனை மீசை மூலிகை செடி சாகுபடி செய்தால், சிறுநீரக தொற்று நோய்களை முற்றிலும் தடுக்க பெரிதளவில் உதவுகிறது. பல லட்ச ரூபாய்கள் செலவழித்து மருந்துகளை வாங்குவதை காட்டிலும், சில நுாறுகள் கொடுத்து மூலிகை செடிகளை வாங்கி வளர்த்து பயன்பெறலாம். பூனை மீசை மூலிகை செடிகளை, விளை நிலங்களில் சாகுபடி செய்து, இந்தகீரையை உலர்த்தி பொடி செய்து விற்பனைசெய்தால், விவசாயிகள் கணிசமானவருவாய் ஈட்டுவதற்கு வழி வகை கிடைக்கும். இது, நெல், காய்கறி ஆகிய விளை பொருட்களைக் காட்டிலும், குறைந்தமகசூல் தான் கிடைக்கும். இருப்பினும், அதிக வருவாய்க்கு மூலிகை செடிகள் வழி வகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: ஜெ. திருவேங்கடம்98437 29166