அதிக மகசூல் தரும் ஆந்திர எம்.டி.யூ., - 1290 ரக நெல்
ஆந்திர எம்.டி.யூ., - 1290 ரக நெல் மகசூல் குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பூதேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆர். வெங்கட்ராமன் கூறியதாவது:ஆந்திர எம்.டி.யூ., -1290 ரக நெல் சாகுபடி, முதல் முறையாக, இயந்திர நடவு வாயிலாக செய்துள்ளேன். இது, 115 நாளில் அறுவடைக்கு வரும், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறைவு, ஒரு ஏக்கருக்கு 35 மூட்டை மகசூல் கிடைக்கும் என, ஆந்திர மாநில விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.நம்மூர் மணல் கலந்த மண்ணுக்கு அதிக களைப்பு திறன் கொடுக்கிறது. நீர் மற்றும் உரம் மேலாண்மையை முறையாக கையாண்டால், 35 மூட்டைகளுக்கு மேல் நெல் மகசூல் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: ஆர்.வெங்கட்ராமன்,95663 92412.