ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி
பயிர்களின் வளர்ச்சி, மகசூலுக்கு ஊட்டச்சத்தாக செயல்படும் ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைதேவையான பொருட்கள் நாட்டு பசுஞ்சாணம் 10 கிலோ ; கோமியம் 5 முதல் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, துவரை, கொள்ளு, கொண்டைக்கடலை, உளுந்து பயறு ஏதாவது ஒன்றின் மாவு 2 கிலோ, நிலத்தின் மண் கையளவு, குளோரின் கலக்காத தண்ணீர் 200 லிட்டர்.பெரிய தொட்டியில் 200 லிட்டர் தண்ணீருடன் அனைத்தையும் சேர்க்க வேண்டும். தினமும் 3 முறை வீதம் 3 நாட்களுக்கு கலக்கவேண்டும். கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிந்த நீரை எடுத்து வடிகட்டி பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும்.இந்த கரைசலில் 2 மணி நேரம் விதைகளை ஊற வைத்து விதைநேர்த்தி செய்யலாம். நாற்றுகளின் வேர்களை நனையவிட்டு எடுத்து நடவு செய்ய வேண்டும். ஜீவாமிர்தத்தை நீரில் கலந்து பயன்படுத்தும் போது மண்புழுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படும். மண்வளத்தை மேம்படுத்தும்.