கூடுதல் மகசூல் தரும் கஸ்தூரி ரக மாம்பழம்
கருப்பு நிற கஸ்துாரி ரக மாம்பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பயிற்சி வழக்கறிஞர் எம்.ராஜிவ்காந்தி கூறியதாவது:எனது தோட்டத்தில், கருப்பு நிற கஸ்துாரி ரக மாம்பழம் சாகுபடி செய்துள்ளேன். இது, மூன்று ஆண்டுகளுக்கு மேல் அறுவடைக்கு வரும் ஒட்டு ரகம்.இந்த ரக மாமரம் இலை, மரத்தின் தண்டு உள்ளிட்ட அனைத்தும் கருப்பு நிறத்தில் இருக்கும். பூக்கள் மற்றும் மா பிஞ்சுகள் ஊதா நிறத்தில் பூக்கும். பழங்களாக மாறும் போது கருப்பு நிறத்தில் மாறும் தன்மை உடையது.பிற ரக மாம்பழங்களை காட்டிலும், அதிக நார்ச்சத்து நிறைந்தது. மேலும், இந்த மாம்பழத்தின் இனிப்பு சுவை அதிகமாக இருக்கும். துவக்க மகசூலின் போது குறைந்த மகசூல் தரும். அதன்பின், கூடுதல் மகசூலை ஈட்ட முடியும்.இவ்வாறு அவர்கூறினார்.தொடர்புக்கு: எம்.ராஜிவ்காந்தி89402 22567