உள்ளூர் செய்திகள்

கொய்யாவில் பூஞ்சாண நோய் கட்டுப்படுத்த வழிமுறைகள்

கொய்யா சாகுபடியில், பூஞ்சாண நோய் கட்டுப்படுத்தும் முறை குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:கொய்யா சாகுபடியில்,ஆந்த்ராக்னோஸ் என அழைக்கப்படும்பூஞ்சாண நோய் தாக்கம் ஏற்படும். நோய் துவக்கத்தில், இலைகளில் மிகச் சிறிய புள்ளிகள் ஏற்படும். ஒரு இலை, மற்றொரு இலை மீது உரசி, மரக்கிளை மற்றும் காய்களில் பரவும். கொய்யாகாய்களில் சிறிய புள்ளி களாக விழுந்து பழமாகும்போது புள்ளிகள்விரிவடைந்து, கொய்யா பழங்கள் முழுதும் பாதித்து, சுவை மாறுபடும். கொய்யா அறுவடைக்கு பின், வருவாய் இழப்பு ஏற்படும். இதை கட்டுப்படுத்த போர்டோ கலவை,காப்பர் ஆக்சிகுளோரைடு ஆகிய பூஞ்சாணக்கொல்லி மருந்துகளை, மழைக்காலம் துவங்குவதற்கு முன் தெளிக்க வேண்டும். மேலும், நோய் எதிர்ப்பு அதிகமாக இருக்கும் கொய்யா ரகங்களை வளர்க்கவேண்டும். ஊட்டச்சத்துடன் கூடிய நீர் மேலாண்மையை கையாள வேண்டும். இதுதவிர, செடிகளை காவாத்து செய்யவேண்டும். இது போல செய்வதன் வாயிலாக, கொய்யா சாகுபடியில் பூஞ்சாண நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தி, அதிக மகசூல் பெற முடியும். இவ்வாறு அவர்கூறினார். தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா, 97910 15355


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !