உள்ளூர் செய்திகள்

கோயம்பாக்கத்தில் வரும் 6ல் இயற்கை விவசாய பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்டம், கோயம்பாக்கம் கிராமத்தில், செண்பகம் தற்சார்பு இயற்கை வேளாண் பண்ணை உள்ளது. அக்.,6ல், இயற்கை விவசாயம் குறித்து, செயல் விளக்க கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில், பஞ்சகவ்யா தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல், இயற்கை விவசாயத்திற்கு ஏற்ப மண்ணை தயார்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் செயல் விளக்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.இந்த கருத்தரங்குகளில் பங்கேற்க விரும்பும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கலாம்.-தொடர்புக்கு: ச. வீரராகவன், 95660 19910.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !