பாடுபட்டால் பலன்தரும் பன்றி வளர்ப்பு
கோம்பையில் இருந்து 2 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது ராஜூவின் ஆர்.கே.ஆர். பண்ணை இருக்கிறது. பன்றி வளர்ப்பை பற்றி இயற்கை மிகுந்த அந்த சூழலில் நம்முடன் புன்முறுவலுடன் உரையாடினார்.பன்றி வளர்க்கும் முறை : பன்றி வளர்க்க பொதுவாக 10x10 மீ அறை சரியாக இருக்கும். பொதுவாக ஒரு வருஷத்துக்கு 2 முறை ஈத்து விடுவாங்க. 3 ஈத்து வரையும் விடலாம். இதனால் தாய் பன்றியோட ஆற்றல் குறையும். ஒரு பன்றியின் கர்ப்ப காலம் 114 நாட்கள் ஆகும். ஒரு பன்றி ஒரே பிரசவத்தில் 5 முதல் 14 குட்டிகள் வரை ஈனும். தாய் பன்றிக்கு எத்தனை பால் காம்புகள் இருக்கிறதோ அத்தனை குட்டிகளே பிழைக்கும். ஈன்ற 40 நாட்களில் குட்டிகளை தாய் பன்றியிடமிருந்து பிரித்து விடுவார்கள்.பிறந்து 15 நாட்கள் ஆன குட்டிகளுக்கு இரும்புச்சத்து ஊசி போடுவாங்க தாய் பன்றிகளுக்கு 2 மாதத்துக்கு ஒருமுறை ஊட்டச்சத்து டானிக்கும் (5 மிலி) பூச்சி மருந்தும் கொடுக்கப்படும். பன்றியோட கழிவுகள் தாவர வளர்ச்சிக்கு அதிக சத்துக்களை அளிக்கிறது. இந்த கழிவுகளை விளை நிலங்களுக்கு தெளிப்பாங்க. பன்றிகளை பெங்களூருலிருந்து வந்து நம்ம பண்ணையில வாங்குறாங்க. பன்றி வளர்க்க சிறுதொழில் வளர்ச்சி மையம், பன்றி வளர்ப்பு சங்கம் - பொள்ளாச்சி மூலமாகவும் உதவிகளை வாங்கிக்கலாம்.பன்றிகளுக்கு இன்சூரன்ஸ் எடுப்பது நல்லது. நகரங்களாக இருந்தால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தோட அனுமதியைப் பெறனும். பொதுவாக 3 லட்சம் வரை முதலீடு போட்டால் வருடத்திற்கு 10 லட்சம் வரை லாபம் எடுக்கலாம் என புன்னகையோடு கூறுகிறார் ராஜூ.தகவல் : மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள், கிராமப்புற பணி அனுபவத் திட்டம் (2014-2015).- செ.சூர்யா, சி.தமிழ்யாழினி, க.வசந்தா, கு.வேல்மணி நிர்மலா, மா.வெண்ணிலா, சி.விஜயா, ப.செண்பகராணி, அ.ஆஷிகா பீமா.