உள்ளூர் செய்திகள்

தாவர பூச்சிக்கொல்லி

ஆடாதோடா இலைகள் கசப்பு தன்மையுள்ளவை. பட்டை, வேர், பூக்கள் மருத்துவ குணம் உள்ளது. இதன் இலைகள் ஈட்டி வடிவத்திலும் பூக்கள் வெள்ளை நிறத்திலும் இருக்கும். நொச்சி இலை, வேர், பட்டை, விதை, பூக்களும் மருத்துவ குணமுள்ளது. இவை இயற்கை பூச்சிக்கொல்லி விரட்டியாகவும் வேலிப்பயிராகவும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாகவும் பயன்படுகிறது.தயாரிப்பு முறை: நொச்சி இலைகளை சுத்தம் செய்து அரைக்க வேண்டும். 3 லிட்டர் கோமியம் கலந்து இரவில் ஊறவைக்க வேண்டும். காலை கலவையை 70 - 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 3 மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும். திரவம் அடர்த்தியாக இருந்தால் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை சேர்த்து வடிகட்ட வேண்டும். இரவில் குளிர்ந்து விடும். 250 மில்லி தண்ணீரில் 150 கிராம் சோப்புத்துாள் கலந்து கலவையுடன் சேர்த்து கிளற வேண்டும். இதுதான் கலவை. இதில் 50 மில்லிக்கு ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தலாம். - தெய்வேந்திரன் உதவி இயக்குநர் வேளாண் துறை, மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !