வரகு:தமிழகத்தில் வரகு 5871 எக்டரில் பயிரிடப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 1034 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப் படுகிறது. வறட்சி தாண்டவமாடும் காலங்களில் பசியைப் போக்கும் பொருளாக வரகு இருந்துவந்துள்ளது.வரகில் 300 கிலோ கலோரி ஆற்றல், ஈரப்பதம் 1 கிராம், புரதம் 8 கிராம், கொழுப்பு 9 கிராம், தாது உப்புக்கள் 3 கிராம், கார்போஹைட்ரேட் 9 கிராம், நார்ச்சத்துக்கள் 66 கிராம், கால்சியம் 27 மில்லிகிராம், பாஸ்பரஸ் 188 மில்லிகிராம் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும் அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. நம் முன்னோர்கள் இரவில் வரகு சாப்பாடும், பகலில் நாட்டுச்சோளம் சாப்பிட்டு வந்துள்ளனர். இதனால் தேக ஆரோக்கியத்துடனும் சர்க்கரை, காசநோய், நரம்புத்தளர்ச்சி உள்ளிட்ட நோய்கள் இல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழ்ந்துவந்தனர்.வரகு உணவின் மருத்துவ குணங்கள்: நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிக அளவு தானிய வகைகளைச் சேர்த்து வந்தனர். சிலர் அரிசியைப் பயன்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். இது உடல் எடையைக் குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது. உடலில் ஏற்படும் வீக்கம், நுரையீரலில் ஏற்படும் நோய்கள், வயிற்றுப்போக்கு ஆகியவற்றைக் குணப் படுத்தக்கூடியது. வரகை உண்பதால் உடலை சீராக வைத்துக் கொள்ளலாம். கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையைத் தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். உடலில் தேவைற்ற நீரை வெளியேற்றும். நீரிழிவு நோய் என்ற சர்க்கரை நோயைக் குணப்படுத்தும்.பொருட்கள்: வரகிலிருந்து பிஸ்கட், முறுக்கு, கேக், சத்துமாவு போன்ற பலவகை உணவு தயாரிக்கப்படுகிறது.
பேரிக்காய்:
குளிர்பிரதேச தோட்டக்கலைப்பயிர்களில் பேரி வியாபார ரீதியில் சாகுபடி செய்யப்பட்டு வரும் ஒரு முக்கிய பயிர். கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஆப்பிளுக்கு அடுத்தபடியாக அனைத்து விவசாயிகளாலும் பணப்பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. பேரி இந்தியாவில் உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள குலு, சிம்லா, குமாயோன் மலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்பொழுது இமாச்சலபிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், உத்திராஞ்சல், மணிப்பூர், தமிழ்நாடு, அருணாசலபிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களில் பணப்பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நீலகிரி, மேல்பழநி மற்றும் கீழ்பழநி மலையில் சுமார் 2150 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுக்கு 34,400 டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.ரகங்கள்: பார்ட்லெட் (அரவில்லியம் பேரி), பர்கீபர், (சர்க்கரை பேரி), நியூ பியர் (தண்ணீர் பேரி), கண்ரி பியர் (நாட்டுப்பேரி), கீபர் (ஊட்டி பேரி); மேலும் விபரங்களுக்கு: முனைவர் ஜே.ராஜாங்கம், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், கொடைக்கானல்-625 103. போன்: 04542-240 931.
தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் (NADP / RKYYG):
1. துல்லிய பண்ணைத்திட்டம்: சொட்டு நீர் பாசன அமைப்பு நிறுவுதல், நீரில் கரையும் உரங்கள் - TANHODA மானியம் மானிய விலையில்உரங்கள். 2. திருந்திய நெல் சாகுபடி செயல் விளக்கம் அமைத்தல் - 1 ஏக்கர் செயல் விளக்கம் மானியம் ரூ.3000/-, இடுபொருள் மானியம் ரூ.800, கோனோவீடர் மார்க்கர் கருவிகளுக்கு மானியம் ரூ.2,200/-. 3. மானிய விலையில் ஜிங்க் சல்பேட் விநியோகம் - 50 சத மானியம், அதிக பட்சமாக எக்டருக்கு ரூ.425/-. 4. பயறுவகை பயிர்களுக்கு எக்டருக்கு மானியம் ரூ.250/-.டி.ஏ.பி. கரைசல் தெளித்தல் 5. நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் விநியோகம் - எக்டருக்கு மானியம் ரூ.750/-.6. தீவிர துவரை சாகுபடி செயல்விளக்கம் - எக்டருக்கு ரூபாய் 5000/- இடுபொருள் மானியம்.7. பயறுவகை விதை உற்பத்தி மானியம் - பயறுவகை சான்று விதை உற்பத்தி மானியம் கிலோவிற்கு ரூ.15 வீதம். 8. பயறுவகை விதை விநியோக மானியம் - பயறுவகை சான்று விதை விநியோகம் மானியம் கிலோவிற்கு ரூ.8 வீதம்.-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்