உள்ளூர் செய்திகள்

சின்ன சின்ன செய்திகள்

பருத்தி இரகம் எஸ்.வி.பி.ஆர்.4 - கோடை இறவை நெல் தரிசு பகுதிகளுக்கு ஏற்ற உயர் விளைச்சல் இரகம் தற்போது கோடை இறவைப் பட்டத்தில் எஸ்.வி.பி.ஆர்.2 ரகமும், நெல் தரிசு பருத்திப் பகுதிகளில் குறுகிய கால எம்.சி.யு.7, எஸ்.வி.பி.ஆர்.2, எஸ்.வி.வி.ஆர்.3 இரகங்கள் நல்ல மகசூல் கொடுத்தாலும் இந்த இரகங்களின் பஞ்சு தற்போதைய பெரும்பாலான மில் தேவையான 40 ஆம் நம்பர் நூல் நூற்க ஏற்றதாக இல்லை. எனவே திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையம், எஸ்.வி.வி.ஆர்.4 என்னும் உயர்தர, நடுத்தர இழைநீளம் (27.8 மிமீ) கொண்ட உயர் விளைச்சல் பருத்தி இரகத்தை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இந்த இரகம் நடப்பு சாகுபடியிலுள்ள எஸ்.வி.பி.ஆர்.2, எஸ்.வி.பி.ஆர்.3, எம்.சி.யு.7 இரகங்களை விட அதிக விளைச்சல் தருவதுடன் எக்டருக்கு 20 குவிண்டால் பருத்தி விளைச்சலை கொடுக்கிறது.நடுத்தர வயதுடைய இந்த இரகம் 150 நாட்களில் விளையக் கூடியது. மேலும் மறுதழைவிற்கு ஏற்ற இரகமாக இருப்பதால் முதல் அறுவடை 150 நாட்களில் முடிந்தவுடன், காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் குறுவை நீர்வரத்து இல்லாத போதும், ஒரு போக சம்பா பாசனப்பகுதிகளிலும் மறுதழைவிற்கு விட்டு இரண்டாம் அறுவடையில் எக்டருக்கு 1000 கிலோ பருத்தி மகசூல் கிடைக்கிறது. எம்.சி.யு.5 இரகத்துடன் ஒப்பிடும் நிலையில் இருப்பதால் நல்ல விலை கிடைக்கிறது. தகவல்: பருத்தி ஆராய்ச்சி நிலையம், திருவில்லிபுத்தூர்.மானாவாரிக்கேற்ற மாற்றுப் பயிர்கள் : சிறுதானியம் பயிர்களான குதிரைவாலி, வரகு, பனிவரகு, தினை, சாமை முதலிய பயிர்களை நம் முன்னோர்களில் பாரம்பரிய பயிராக பயிரிடப்பட்டு வந்தன. இப்பயிர்கள் தற்போதுள்ள மாறிவரும் பருவ நிலைக்கு ஏற்றவை.மேலும் இது தானியங்களில் ஆரோக்கிய உணவுக்கான தாதுப்பொருட்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன.மானாவாரி சாகுபடிக்கேற்ற பயிர்த்திட்டம் : மானாவாரி செம்மண் நிலங்களுக்கு - பருவம் வடகிழக்கு பருவமழை காலம். விதைப்புக்காலம் - அக்டோபர் இரண்டாவது வாரம். பயிர்த்திட்டம் - தானியப்பயிர் திட்டம் - நிலக்கடலை, எள், தானியச்சோளம், தீவனச்சோளம்.ஊடுபயிர்த்திட்டம் - நிலக்கடலை + மொச்சை / துவரை / தட்டப்பயறு.ஒருங்கிணைந்த பண்ணையம் - 5 ஏக்கர் பரப்புஒருபருவப்பயிர் (3.5 ஏக்கர்) - பருத்தி/ சோளம்/ கம்பு/ மக்காச்சோளம்/ சூரியகாந்திசிறு தானியங்கள் / பயறுவகைப் பயிர்கள் மற்றும்பயறுவகைப் பயிர்கள் சார்ந்த ஊடுபயிர் திட்டம்பழப்பயிர்கள் (0.5 ஏக்கர்) - சப்போட்டா / நெல்லி / சீத்தா / புளிதீவனப்பயிர்கள் (0.5 ஏக்கர்) - சுபாடில் / அசத்தி / வேம்பு மற்றும் வேலிமசால் / கொழுக்கட்டைப்புல் சார்ந்த ஊடுபயிர்கள்கால்நடை வளர்ப்பு- கோழி வளர்ப்பு, கறவை மாடுகள் வளர்ப்பு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு 5 பெட்டை + 1 கிடா (தகவல் : மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை).பயறுவகைப்பயிர்களில் பூச்சி மேலாண்மை : காய்ப்புழுக்கள் - டைகுளோஸ்வாஸ் 400 மிலி / ஏக்கர் அல்லது இண்டாக்ஸா கார்ப் 200 மிலி / ஏக்கர் அல்லது குளோர்ட்ரேனிலிப்ரோல் 60 மிலி / ஏக்கர்.சிறுதானியம் - இரகம் - வயது நாட்கள் - விதையளவு (கிலோ / ஏக்கர்) - இடைவெளி (செ.மீ) - தானிய மகசூல் கிலோ / ஏக்கர்வரகு - ஏ.பி.கே.1 - 100 - 5 - 45ஙீ10 - 1000பனிவரகு - கோ (பிவி)5 - 70 - 4 - 22.5ஙீ7 - 700தினை - கோ (தி)7 - 90 - 5 - 22ஙீ10 - 700சாமை - கோ.4 - 80 - 5 - 22ஙீ10 - 1100குதிரைவாலி - கோ(கேவி)2 - 95 - 4 - 22.5ஙீ10 - 800தகவல் : மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு.- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !