உள்ளூர் செய்திகள்

இயற்கை உரம் பயன்படுத்தி புளிப்பு செர்ரி சாகுபடி

புளிப்பு சுவையுடைய செர்ரி பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.எல்.ஆர்., பண்ணை முதுகலை பட்டதாரி விவசாயி பி.மாதவி கூறியதாவது:சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி, பூ, பழங்கள் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், புளிப்பு சுவை தரும் செர்ரி ரக பழங்களை சாகுபடி செய்துள்ளேன்.நம்மூர் சவுடு மண்ணுக்கு, செடி வேகமாக வளர்கிறது. மழை மற்றும் குளிர் காலங்களில், செடிகளில் காய்கள் ஒருபுறம், பழங்கள் மறுபுறம் என, மகசூல் கொடுத்துக் கொண்டே இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:- பி.மாதவி, 97910 82317.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்