கோழி குஞ்சு வளர்ப்பில் பர்சல் நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி
பர்சல் நோய் கட்டுப்படுத்துவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர்மற்றும் தலைவர்முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:இளம் கோழி குஞ்சு வளர்ப்பில், பர்சல் நோய் என அழைக்கப்படும்கம்போரா நோய் தாக்கம் ஏற்படும்.இந்தநோய் தாக்கிய கோழி குஞ்சுகளில், தொடை மற்றும் மார்பு பகுதியில் ரத்த கட்டுஏற்படும்.அதிகம் பாதித்த கோழி குஞ்சுகளில், ஆசன வாய் பகுதியை தன் அலகால் சேதப்படுத்திக் கொள்ளும்.இறகு உதிர்ந்துவிடும், தீவனம் உண்ணாமல் மெலிந்து காணப்படும். இதனால், இளம்கோழி குஞ்சு வளர்ப்பில் இழப்பு ஏற்பட்டு, வருவாய் இழப்பு ஏற்படும்.இதை தவிர்க்க, அந்தந்த கால்நடை உதவி மருத்துவரின் அறிவுரை படி, 2வது வார கோழி குஞ்சுகள் மற்றும் நான்காவது வார கோழி குஞ்சுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். இந்த நோய் தடுப்பு முறைகளை முறையாக கையாளுவதன் வாயிலாக, கோழி குஞ்சுகளை தாக்கும் பர்சல் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அவர்கூறினார்.தொடர்புக்கு: கே.பிரேமவல்லி,97907 53594.