கூடுதல் வருவாய் தரும் சோற்றுக்கற்றாழை
சோற்றுக்கற்றாழை சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, கூவம் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.ஜெயந்தி கூறியதாவது:கொய்யா, அத்தி ஆகிய பழக்கன்றுகள் மற்றும் மகோகனி, செம்மரம்,குமிழ் தேக்கு உள்ளிட்ட பலவித மரக்கன்று சாகுபடி மற்றும் உற்பத்தி செய்து கொடுத்து வருகிறேன்.அந்த வரிசையில், மருத்துவ குணம் நிறைந்த சோற்றுக்கற்றாழை செடிகளை, 10 சென்ட் விளைநிலங்களில் சாகுபடி செய்யலாம். இந்த சோற்றுக்கற்றாழைக்கு குறைந்த நீர்ப்பாசன வசதி போதுமானது.மேலும், வறண்ட நிலங்களிலும் வளரும் தன்மை உடையது. பக்கவாட்டில் வரும் சோற்றுக்கற்றாழைகளை பறித்து, சாகுபடியை விரிவுபடுத்தலாம்.சோற்றுக்கற்றாழை சாகுபடியை பொருத்தவரையில், ஜூஸ் விற்பனை மற்றும் மதிப்புக்கூட்டிய பொருளாக தயாரிக்க உதவுகிறது. இதை சந்தைப்படுத்தும் திறன் இருக்கும் விவசாயிகளுக்கு, கூடுதல் வருவாய் கிடைக்க உதவுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: கே. ஜெயந்தி, 94425 18127.