தரமான விதைகளை நாமே தரம் பிரிக்கலாம்
சாம்பல் பூசணியில், தர மான விதைகளை பிரிப் பது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் தா.ல.பிரீத்தி கூறியதாவது:ஆடி, தை ஆகிய மாதங் களில், சாம்பல் பூசணிக் காய் சாகுபடி செய்யலாம். ஆண் பூ, பெண் பூ என, தனித்தனியாக பூக்கும். அதற்கு ஏற்ப, இடை வெளி விட்டு காய் சாகு படி செய்ய வேண்டும். நீர் மற்றும் உர நிர்வாகத் திற்கு பின், 1.50 கிலோ விற்கு மேல் இருக்கும் காய்களை தேர்வு செய்ய வேண்டும்.விதைக்கு தேர்வு செய்யப்பட்ட சாம்பல் பூசணிக்காய்களை வழக் கமான அறுவடை நாட்களை காட்டிலும், ஒரு வாரம் கழித்து அறுவடை செய்ய வேண்டும். அதை இரண்டாக வெட்டி, நடுவில் இருக் கும் விதையுடன் கூடிய சதை பற்றை பிரித்தெ டுத்து, நீரில் போட்டு, ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் கலந்து, 30 நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும்.தரமான விதைகள் நீரில் மூழ்கி விடும். தரம் இல்லாத விதைகள் நீரில் மிதக்கும். தரம் பிரிக்கப்பட்ட விதை களை, பிளாஸ்டிக் சாக்கு மீது பரப்பி உலர்த்த வேண்டும். குறிப்பாக, காலை 8:00 நண்பகல் 12:00 மணி வரையிலும், மாலை 3:00 5:00 மணி வரையிலும் உலர்த்த வேண்டும். இது போல் செய்தால், தரமான விதைகளை நாமே உற் பத்தி செய்துவிடலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: தா.ல.பிரீத்தி, இணை பேராசியர், நெல் ஆராய்ச்சி திரூர்.