உள்ளூர் செய்திகள்

மாடி தோட்டத்திலும் செண்பக பூ வளர்க்கலாம்

மாடி தோட்டத்திலும் செண்பக பூவை சாகுபடி செய்யலாம்.இதுகுறித்து கே.கவிதாகூறியதாவது:எனக்கு சொந்தமான மாடி தோட்டத்தில், கத்திரி, தக்காளி ஆகிய நாட்டு ரக காய்கறி வகைகள் மற்றும் திப்பிலி, மிளகு, துளசி உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகளை சாகுபடி செய்து வருகிறேன்.இந்த மூலிகை சாகுபடியின் வாயிலாக, தலைக்கு தடவுவதற்கு எண்ணெய் உள்ளிட்ட மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து விற்பனை செய்து, கணிசமான வருவாய் ஈட்டி வருகிறேன். அந்த வரிசையில், மாடி தோட்டத்தில் வெள்ளை நிறம் மற்றும் ஆரஞ்சு நிற செண்பகபூ சாகுபடி செய்து வருகிறேன். ஒவ்வொரு இலைக்கும் ஒரு பூ பூக்கிறது. இது, ஆண்டு முழுதும் மகசூலை கொடுத்து கொண்டே இருக்கும்.மற்ற பூக்கள் கிலோ கணக்கில் விற்றால், இந்த செண்பக பூக்களை எண்ணிக்கை கணக்கில் சந்தையில் விற்பனை செய்கின்றனர். ஆன்மிகத்தில், மகாலட்சுமி,முருகப்பெருமானுக்கு செண்பகபூ சூட்டி வழிபட்டால், தீர்க்க முடியாத துன்பங்களும் தீரும். இந்த பூ சாகுபடி செய்வோருக்குகணிசமான வருவாய்கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: - கே.கவிதா, காஞ்சிபுரம்.88708 00021


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !