உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பாக்., - வங்கதேசத்தினர் 137 பேர் மீது நடவடிக்கை

பாக்., - வங்கதேசத்தினர் 137 பேர் மீது நடவடிக்கை

பெங்களூரு:கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளைச் சேர்ந்த 137 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.சட்டசபையில் பா.ஜ., உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் எத்னால் எழுப்பிய கேள்விக்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பதில்:மாநிலத்தில் சட்டவிரோதமாக வசித்த பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 137 பேரை அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக கர்நாடகாவில், வெளிநாட்டினர் சட்டவிரோதமாக வசிக்கின்றனர். அவர்களை நாடு கடத்தும் பணியும் நடக்கிறது.விஜயபுராவில் 27 நில முறைகேடு வழக்குப் பதிவாகி உள்ளது. இதில் 8 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்பது வழக்குகளில் விசாரணை நடக்கிறது.முதியவர்களை ஏமாற்றி அவர்களின் ரேஷன், வாக்காளர் அடையாள அட்டையை நகல் எடுத்து விற்பனை செய்வது, பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.விஜயபுராவில் என்.ஐ.ஏ., அலுவலகம் திறக்க, மத்திய அரசு முன்மொழிந்தால் அதன்படி அலுவலகம் திறக்கப்படும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V RAMASWAMY
மார் 06, 2025 17:03

இது வரவேற்கத்தக்கது என்றாலும், சரியானபடி அடையாளம் கண்டு ஆய்வு செய்தால், சட்ட விரோத பாக், வங்க தேசத்தின் லட்சக்கணக்கில் இருக்கலாம். அதிரடி நடவடிக்கை அதுவும் கையூட்டு எதுவும் வாங்காமல் உடனடி தேவை. அவர்கள் நாட்டில் இந்துக்களை நடத்தும் அவலங்களை கவனித்தால், நம் நாடு எடுக்கும் நடவடிக்கைகள் போதாது.


முக்கிய வீடியோ