உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குறைந்தது இட்லி விற்பனை தோசைக்கு மாறிய மக்கள்

குறைந்தது இட்லி விற்பனை தோசைக்கு மாறிய மக்கள்

பெங்களூரு: ஹோட்டல்களில் இதற்கு முன்பு, இட்லி அமோகமாக விற்பனையானது. தட்டு இட்லி, மசாலா இட்லி என, பல வகையான இட்லிகள் தயாரித்து விற்கப்பட்டன. லாபமும் கிடைத்தது. ஆனால் பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தி இட்லி தயாரிப்பதால், புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது, சுகாதாரத்துறை ஆய்வில் தெரிந்தது.இதை தீவிரமாக கருதிய சுகாதாரத்துறை, இட்லி தயாரிக்க பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என, உத்தரவிட்டது. இதன்படி பல ஹோட்டல்களில் வாழை இலை, துணி பயன்படுத்தி இட்லி வேக வைக்கப்படுகிறது. ஆனாலும், வாடிக்கையாளர்கள் இட்லி சாப்பிட தயங்குகின்றனர். தோசை வாங்குகின்றனர்.பெங்களூரின் மல்லேஸ்வரம், ஆர்.டி.நகர், ஜெயநகர் உட்பட பல்வேறு பகுதிகளின் ஹோட்டல்கள், தர்ஷினிக்களில் இட்லி விற்பனை குறைந்துள்ளது. இட்லிக்கு பதிலாக தோசை, ஆர்டர் செய்கின்றனர். சிலர் ஹோட்டல்களின் சமையலறைக்கு சென்று, இட்லி தயாரிக்க துணி பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்த பின் ஆர்டர் செய்கின்றனர்.இட்லி விற்பனை குறைந்ததால், லாபமும் குறைந்துள்ளது. ஹோட்டல், ரெஸ்டாரென்ட் உரிமையாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ