உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு -- தார்வாட் வந்தே பாரத் ரயிலுக்கு மவுசு

பெங்களூரு -- தார்வாட் வந்தே பாரத் ரயிலுக்கு மவுசு

பெங்களூரு: பெங்களூரு -- தார்வாட் இடையில் வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு ஆனது. இந்த ரயிலுக்கு பயணியர் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது.நாட்டின் முக்கிய நகரங்களை வேகமாக இணைக்கும் வகையில், மத்திய அரசு வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தியது.பெங்களூரு - தார்வாட் நகரங்களை இணைக்கும் வகையில், கடந்த ஆண்டு ஜூன் 27ம் தேதி, வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டது.முதலில் பெங்களூரில் இருந்து ஹூப்பள்ளி வரை ரயில் இயக்கப்பட்டது. அதன்பின்னர் தார்வாட் வரை நீட்டிக்கப்பட்டது.பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து தினமும் காலை 5:45 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 12:10 மணிக்கு தார்வாட்டை சென்றடைகிறது. தார்வாட்டில் இருந்து மதியம் 1:15 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 7:45 மணிக்கு பெங்களூரை வந்தடைகிறது.இந்நிலையில், வந்தே பாரத் ரயிலில் தாவணகெரே பயனியர் தான் அதிகம் பயணம் செய்வதாகவும், தார்வாட்டில் இருந்து ரயில் வரும்போது, குறைந்த பயணியரே அங்கிருந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரிமாறப்பட்டது.ஆனால், இதை தென்மேற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி மஞ்சுநாத் மறுத்து உள்ளார்.பெங்களூரில் இருந்து ரயில் தார்வாட் செல்லும்போது, தாவணகெரேக்கு 15.67 சதவீதம் பேர் தான் முன்பதிவு செய்கின்றனர். ஆனால் ஹூப்பள்ளி, தார்வாட் செல்ல 58.09 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.பெங்களூரில் இருந்து தினமும் தார்வாட்டுக்கு சராசரியாக 79 பயணியர் பயணம் செய்கின்றனர். சமூக வலைதளங்களில் யார் என்ன வேண்டும் என்றாலும் பேசலாம். ஆனால், எங்களிடம் தரவு உள்ளது. பெங்களூரு -- தார்வாட் வந்தே பாரத் ரயிலுக்கு பயணியரிடம் மவுசு அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை