உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சொத்து வரி செலுத்தாத அரசு துறைகள் வசூலிக்க முடியாமல் மாநகராட்சி திணறல்

சொத்து வரி செலுத்தாத அரசு துறைகள் வசூலிக்க முடியாமல் மாநகராட்சி திணறல்

பெங்களூரு: வரி ஏய்ப்பு செய்யும், தனியார் சொத்து உரிமையாளர்களை மிரட்டி, உருட்டி வரி வசூலிக்கும் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், கோடிக்கணக்கான ரூபாய் வரி பாக்கி வைத்துள்ள அரசு துறைகளிடம், வசூலிக்க முடியாமல் திணறுகின்றனர்.

சொத்துகள் ஜப்தி

பெங்களூரு மாநகராட்சி கருவூலத்துக்கு, வருவாய் கொண்டு வருவதில் சொத்து வரி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டு தோறும் சொத்து வரியை எதிர்பார்த்து, மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்கிறது. ஆனால் எதிர்பார்த்தபடி வரி வசூலாவது இல்லை. வளர்ச்சி பணிகளுக்கு, மாநில அரசிடம் கை நீட்ட வேண்டியுள்ளது.சொத்து வரி வருவாயை அதிகரிக்க, பெங்களூரு மாநகராட்சி முயற்சிக்கிறது. சொத்துகளை ஜப்தி செய்வதாக மிரட்டி, தனியார் சொத்து உரிமையாளர்களிடம் வரி வசூலிக்கிறது. சில சொத்துகளை ஜப்தி செய்து ஏலம் விடவும் தயாராகி வருகிறது.ஆனால் அரசு துறைகளும், மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளன. இதை வசூலிக்க முடியாமல், அதிகாரிகள் திணறுகின்றனர்.பெங்களூரு மாநகராட்சி 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய, தயாராகி வருகிறது. வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு துறைகளின் கட்டடங்களில் இருந்தும் வரி வசூலிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பல முறை நோட்டீஸ் அனுப்பி, வரியை வசூலிக்க முயற்சித்தும் பலன் இல்லை.

கேள்வி

விதான்சவுதா, விகாஸ் சவுதா கட்டடங்கள், 20-08 முதல் வரி செலுத்தவில்லை. ஏழு கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. இதை செலுத்துங்கள் என, மாநகராட்சி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியும் பலன் இல்லை. இச்சூழ்நிலையில் அரசு துறைகள் பாக்கி வைத்துள்ள வரியை, மாநகராட்சியால் வசூலிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:இதற்கு முன் நோட்டீஸ் அளித்தும், அரசு துறைகள் பாக்கி வைத்துள்ள வரியை செலுத்தவில்லை. இனிமேல் கடும் நடவடிக்கை எடுத்து, வரியை வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். முதலில் நோட்டீஸ் அனுப்பி, விதிமுறைப்படி வரியை செலுத்தும்படி கேட்போம். அவசியம் ஏற்பட்டால், சொத்துகளை முடக்குவோம்.மண்டல வாரியாக மிக அதிகமான சொத்து வரி பாக்கி வைத்துள்ள சொத்துதாரர்கள் பட்டியலிடுவதை போன்று, வரி பாக்கி வைத்துள்ள மத்திய, மாநில அரசுகளின் துறைகள், இவற்றின் அங்க நிறுவனங்களின் பட்டியலை தயாரிக்கும்படி, வருவாய்ப்பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பட்டியல் தயாரானதும் அந்தந்த துறைகளின் முக்கியஸ்தர்களுக்கு கடிதம் எழுதி, வரி பாக்கியை செலுத்தும்படி கேட்போம். செலுத்தாவிட்டால் சொத்துகளை முடக்குவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை