உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அனுமதி பெறாமல் மின்சாரம் ஐக்கியாவுக்கு ரூ.65 லட்சம் அபராதம்

அனுமதி பெறாமல் மின்சாரம் ஐக்கியாவுக்கு ரூ.65 லட்சம் அபராதம்

பெங்களூரு: அனுமதி இல்லாமல் 4,021 ஹெச்.பி., மின்சாரத்தால் இயங்கும் இயந்திரங்கள் பயன்படுத்திய 'ஐக்கியா' நிறுவனத்துக்கு, பெங்களூரு மாநகராட்சி 65 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.பெங்களூரின், துமகூரு சாலையில் 'ஐக்கியா' நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் 2022 மே 13ம் தேதி, மாநகராட்சியிடம் தொழில் லைசென்ஸ் பெற்றது. அதிக மின்சாரம் பயன்படுத்துவதற்காக, அனுமதி ஏதும் பெறவில்லை.கடந்த ஜனவரி 8ம் தேதி, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், ஐக்கியா மாலில் சோதனை நடத்தினர். அப்போது அனுமதி இல்லாமல் 4,021 ஹெச்.பி., திறன் கொண்ட மின்சாரத்தால் இயங்கும் இயந்திரங்களை பயன்படுத்துவது தெரிந்தது. குடிநீர் பாட்டில், குளிர்பானம் விற்கவும் அனுமதி பெறவில்லை.ஐக்கியா நிறுவனம், தொழில் உரிமம் பெற்றபோது, அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் சேர்த்து, புதுப்பித்துக் கொண்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கான கட்டணத்தை மட்டுமே செலுத்தியது. மூன்று ஆண்டுகளுக்கான கட்டணம் செலுத்தாததும், சோதனையில் தெரிய வந்தது.எனவே மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் அனுப்பி 65,93,600 ரூபாய் அபராதம் செலுத்தும்படி கூறினர். அந்நிறுவனம் பதில் அளிக்கவில்லை.அதன்பின் இம்மாதம் 20ம் தேதி மூன்றாவதாக நோட்டீஸ் அனுப்பி எச்சரித்தது. அதன்பின் ஐக்கியா நிர்வாகம், அபராத தொகையை டி.டி., மூலம் செலுத்தியது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'உரிமம் பெறுவதற்கான கட்டணம் பாக்கி வைத்தது, அனுமதி பெறாமல் மின்சாரம் பயன்படுத்தியதற்காக, ஐக்கியா நிறுவனம் அபராதம் செலுத்தியுள்ளது. டி.டி., பணத்தை மாநகராட்சி கணக்கில் செலுத்துவோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி