வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பா.ஜ ஆளுங்க பிண்ணனி இருந்தால் கேஸ் ஊத்தி மூடப்படும்.
தங்கம் கடத்துவது அந்நியச்செலாவணி மூலம் ஏமாற்றுவது மற்றும் தீவிரவாத வேலைகளுக்கு அல்லது மதமாற்ற நடவடிக்கைகளுக்கு மட்டுமே.
பெங்களூரு: கர்நாடகாவில், தங்கம் கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவுக்கு தேச விரோத சக்திகளுடன் தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கடத்தி வந்த, கூடுதல் டி.ஜி.பி., ராமச்சந்திர ராவ் மகளும், நடிகையுமான ரன்யா ராவ், 34, கடந்த 3ம் தேதி இரவு வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜாமின் கேட்டு ரன்யா ராவ் தரப்பில் அவரது வக்கீல், நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தும், விசாரணைக்காக தங்கள் காவலுக்கு அனுப்ப கோரியும், வருவாய் புலனாய்வு பிரிவு வக்கீல் நீதிமன்றத்தில் மனு செய்தார்.நேற்று நடந்த விசாரணையின் போது, வருவாய் புலனாய்வு பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், 'ரன்யா ராவை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த கடத்தல் தேசவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்பு உடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.'கடந்த ஆறு மாதங்களில், 27 முறை துபாய் சென்று வந்து உள்ளார். 'ஹர்ஷவர்தினி ராவ் என்று பாஸ்போர்ட்டில் அவரது பெயர் உள்ளது' என்று கூறினார். இவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ரன்யா ராவை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, வருவாய் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி கொடுத்தார்.இந்த கடத்தலில் அரசியல்வாதிகள் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. விசாரணையின் போது பல உண்மைகள் வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது. ரன்யா ராவுடன் அவரது கணவர் ஜதினும் அடிக்கடி துபாய் சென்றதால், அவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் என தெரிகிறது.நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இருவருக்கும், பெங்களூரில் உள்ள தாஜ் ஹோட்டலில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதற்கிடையே, விசாரணையின்போது வருவாய் புலனாய்வு துறையினர் ரன்யாவை தாக்கியதால் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் விசாரணையில், ரன்யா ராவ் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:என் தந்தை ஹெக்டேஷ், ரியல் எஸ்டேட் தொழிலதிபர். என் தாயார் இரண்டாவதாக திருமணம் செய்ததால், டி.ஜி.பி., ராமச்சந்திர ராவ், என் வளர்ப்பு தந்தை. என் கணவர் ஜதின் ஹுக்கேரி, கட்டடக் கலை நிபுணர். விமான நிலையத்தில் என்னிடம் இருந்து 17 தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.துபாய் மட்டுமல்ல மற்ற மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகளுக்கும் அதிகமாக சென்று வந்தேன். மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றேன். தற்போது, மிகவும் சோர்வாக இருப்பதால் அது பற்றிய விபரங்களை கூற முடியாது; எனக்கு ஓய்வு தேவை.இவ்வாறு அவர் தெரிவித்தார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் தங்கம் அல்லது வேறு ஏதேனும் கடத்தி வந்தாரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
பா.ஜ ஆளுங்க பிண்ணனி இருந்தால் கேஸ் ஊத்தி மூடப்படும்.
தங்கம் கடத்துவது அந்நியச்செலாவணி மூலம் ஏமாற்றுவது மற்றும் தீவிரவாத வேலைகளுக்கு அல்லது மதமாற்ற நடவடிக்கைகளுக்கு மட்டுமே.