உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அடுக்குமாடி குடியிருப்புகளில் வாட்டர் ஆடிட் நடத்த திட்டம்

அடுக்குமாடி குடியிருப்புகளில் வாட்டர் ஆடிட் நடத்த திட்டம்

பெங்களூரு: பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், தண்ணீர் நல்ல முறையில் பயன்படுத்துவது குறித்து, 'வாட்டர் ஆடிட்' ஆய்வு செய்ய அனுமதி அளித்தால் மட்டுமே, காவிரி நீர் வினியோகிப்பது என்பது குறித்து, குடிநீர் வாரியம் ஆலோசிக்கிறது.வறட்சியால் கடந்தாண்டு கோடைக் காலத்தில் பெங்களூரில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. நடப்பாண்டு கோடைக்காலம் துவங்க உள்ளது. மக்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படாமல், பெங்களூரு குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. காவிரி குடிநீர் இணைப்பு இல்லாத புறநகர்ப் பகுதிகளில், இப்போதே குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. டேங்கர் மூலமாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும், கட்டாயமாக காவிரி இணைப்பு பெற வேண்டும் என, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். எனவே பெங்களூரு குடிநீர் வாரியம், அடுக்குமாடி குடியிருப்புகளின் கூட்டமைப்புகளுடன் ஆலோசனை நடத்தியது.டேங்கர் மாபியாவால் வெறுப்படைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமைப்புகள், காவிரி நீர் இணைப்பு பெற ஆர்வம் காட்டுகின்றனர், குடிநீர் வாரியம் நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தவும் தயாராக உள்ளனர்.ஏற்கனவே காவிரி குடிநீர் இணைப்பு பெறும் அடுக்குமாடி குடியிருப்புகள், தங்களுக்கு கூடுதல் குடிநீர் வினியோகிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆனால், பெங்களூரு குடிநீர் வாரியம், வருவாய் அதிகரிப்பதுடன், நீரை மிச்சப்படுத்தும் நோக்கில் வகுத்துள்ள, 'வாட்டர் ஆடிட்' அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.இது குறித்து, பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறியதாவது:கடந்தாண்டு கோடைக் காலத்தில், நீரை மிச்சப்படுத்துவது, சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை பயன்படுத்துவது, போர்வெல் பயன்படுத்துவதில், தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது, மழை நீர் சேகரிக்கும் வசதி செய்து கொள்வது என, ஐந்து விதிமுறைகள் வகுத்துள்ளது.இந்த ஐந்து விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே, காவிரி குடிநீர் இணைப்பு வழங்க, குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. நீர், நல்ல முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள, வாட்டர் ஆடிட் செய்யப்படும். இதில் தேர்ச்சி பெறும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, காவிரி நீர் வினியோகிக்கப்படும்.அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், குடிநீருக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவிட தயாராக உள்ளனர். அதற்காக அவர்களுக்கு காவிரி குடிநீர் வினியோகிக்க முடியாது. நீர் வீணாகும் சாத்தியங்கள் உள்ளன. நீரை நல்ல முறையில் பயன்படுத்துகின்றனரா என்பதை, ஆய்வு செய்த பின், காவிரி நீர் வினியோகிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி