உள்ளூர் செய்திகள்

1. 2.. 3... கேம் ஆன்...

மஹாராஜா கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும் மஹாராஜா டிராபி டி - 20 போட்டி அடுத்த மாதம் 11ம் தேதி துவங்குகிறது. சின்னசாமி மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில், குல்பர்கா மிஸ்டிக்ஸ் - மங்களூரு டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆண்டு, எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்க துவங்கி உள்ளது. விளையாட்டு வளாகம் பெங்களூரில் ஹொன்னகனஹட்டி, ராவுதனஹள்ளி ஆகிய இடங்களில் இரண்டு அதிநவீன விளையாட்டு வளாகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஆலோசனை நடக்கிறது. டெண்டர் கூடிய விரைவில் கோரப்படும் என விளையாட்டு துறை கமிஷனர் சேத்தன் தெரிவித்து உள்ளார். சதுரங்க போட்டி பெங்களூரு, ஆர்.ஆர்., நகரில் உள்ள கிருஷ்ணா கார்டனில் வரும் 27ம் தேதி, சதுரங்க போட்டி நடக்கிறது. இப்போட்டியை சாம்பியன்ஸ் செஸ் அகாடமி நடத்துகிறது. 16 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் போட்டி நடக்கிறது. இப்போட்டியில் பங்கு பெற www.champischessacademy.comஎன்ற இணையதளத்தில், இன்றைக்குள் பதிவு செய்ய வேண்டும் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை