உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பாஷ்யம் நகர் முருகன் கோவில் முன் இன்று 1,008 திருவிளக்கு பூஜை

பாஷ்யம் நகர் முருகன் கோவில் முன் இன்று 1,008 திருவிளக்கு பூஜை

ஸ்ரீராமபுரம்: பாஷ்யம் நகர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் முன், இன்று 1,008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. சகலவிதமான செல்வத்தை அளிக்கும் வரலட்சுமி விரதம், ஆடி பவுர்ணமி இணைந்த நன்னாளான ஆடி மாதம் நான்காவது வெள்ளியான இன்று, மாலை 4:00 மணிக்கு 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீராமபுரம் 'சுதா புக் சென்டர்' இணைந்து, ஸ்ரீராமபுரம் பாஷ்யம் நகரில் உள்ள ஸசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் அருகில் திருவிளக்கு பூஜை நடத்துகின்றன. தோஷங்கள் நீங்கிட, திருமண தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் கூடிவரவும், மங்கல பாக்யம் கைகூடி மழலை பேறு பெற்றிடவும், மஹாலட்சுமி கடாட்சம் பெற்று, மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திடவும், உற்சாகம் நிறைந்திட, அம்பிகையை வழிபாடு செய்தால், அற்புதமான பலன்கள் கிடைக்கும். கோவிலில் இன்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு கணபதி பூஜை நடக்கிறது. அதை தொடர்ந்து துர்கை, லட்சுமி, சரஸ்வதி விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. திருவிளக்கின் பாதத்தில் திருவடி பூஜை, இதன் பின் திருவிளக்கின் முன் 1,008 லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. இதையடுத்து திருவிளக்கிற்கு நெய்வேத்தியம், நிறைவில் மஹா மங்களாரத்தி காண்பிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. தினமலர் வாசகர்களுக்கு 'ஜாக்பாட்' ரூ.2,000 சந்தாவுக்கு ரூ.11 லட்சம் காப்பீடு வாசகர்களே, 'தினமலர்' நாளிதழை பெறுவதற்கான, 1,999 ரூபாய் ஆண்டு சந்தா தொகையை, நம் நாளிதழ் விற்பனை பிரதிநிதிகளின் 98442 52106, 94821 06254 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு செலுத்தலாம். இதன் மூலம் 'தாமரை பிரதர்ஸ் மீடியா' பதிப்பித்துள்ள 1,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை இலவசமாக பெறலாம். அதுமட்டுமல்ல, 11 லட்சம் ரூபாய்க்கான விபத்து, வீட்டு உடைமை, மருத்துவ காப்பீட்டையும் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை