உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்களூரில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 10,650 பேர்

 பெங்களூரில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 10,650 பேர்

பெங்களூரு: 'பெங்களூரில் 10,650 பேர் உட்பட 13,675 பேர் சட்ட விரோதமாக கர்நாடகாவில் தங்கி உள்ளனர்' என, உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளதாவது: மாநிலத்தில் மொத்தம் 13,675 பேர் சட்ட விரோதமாக குடியேறியிருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில், 10,650 பேர் பெங்களூரில் வசிக்கின்றனர். பெங்களூரை அடுத்து மைசூரில் 810, உத்தர கன்னடாவில் 496, பெலகாவியில் 458, உடுப்பியில் 458, தட்சிண கன்னடாவில் 268, ராம்நகரில் 191, பல்லாரியில் 53, துமகூரில் 40, சிக்கபல்லாபூரில் 38, ஹூப்பள்ளி - தார்வாடில் 35, மாண்டியாவில் 37, ஷிவமொக்காவில் 21, தாவணகெரேயில் 20 உட்பட 13,675 பேர் சட்ட விரோதமாக தங்கி உள் ளனர். சம்பந்தப்பட்டவர்களை பிடித்து, அவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைக்க, உள்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !